தமிழக இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு போக்குவரத்து துறை குறித்துப் பேசுகையில், நமது நாட்டிலேயே குக்கிராமங்களுக்கும் சென்றடையக்கூடிய சீரான போக்குவரத்துச் சேவையை தமிழ்நாடு அரசுதான் தொடர்ந்து வழங்கி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 6,121 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,087 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும். பயன்பாட்டிற்கு உகந்த 3,673 பேருந்துகளை, முற்றிலும் புதுப்பித்து இயக்குவதற்காக 374 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
380 பசுமை மின் பேருந்துகள் 288 கோடி ரூபாய் மதிப்பீட்டில், போக்குவரத்துச் சேவையில் அண்மையில், இணைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்றுந்து (Mini Bus) திட்டம் நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் வகையில் 1.603 புதிய வழித்தடங்களில் வெற்றிகரமாக விரிவாக்கப்பட்டுள்ளது.
சேவை போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டுத் திறன். வழங்கல் மற்றும் நிதிநிலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, போக்குவரத்துக் கழகங்களுக்கு சேவை அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் நோக்கத்தில், ஊக்க நிதியம் ஒன்று 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக 4,000 கோடி ரூபாய், மாணவர்கள் பேருந்துப் பயணக் கட்டணம் திட்டத்திற்காக 1782 கோடி ரூபாய், டீசல் மானியத்திற்காக ரூ.1857 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 253 கி.மீ. நீளமுள்ள சாலைகளை 1,647 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தட சாலைகளாக அகலப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
நடப்பாண்டில் 1057 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.