17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் இரண்டாவது மனைவி வீட்டில் வசித்த தந்தை மரணம் சாவில் மர்மம்

சோழவந்தானில் இரண்டாவது மனைவி வீட்டில் வசித்த தந்தை மரணம் சாவில் மர்மம்

எழுதியவர்: mohan February 17, 2026, 11:05 am

சோழவந்தானில் இரண்டாவது மனைவி வீட்டில் வசித்த தந்தை மரணம் சாவில் மர்மம் இருப்பதாக மகன் புகார் போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது தந்தை அகரமுத்து அகர முத்துவின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்த நிலையில் இவர் சோழவந்தான் பசும்பொன் நகரில் பிச்சையம்மாள் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார் பிச்சையம்மாவுக்கு ரங்கசாமி மருது என்ற மகன்களும் மருதுவின் மனைவி கோமதி ஆகியோரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர் இந்நிலையில் திங்கட்கிழமை இரவு மணிகண்டனுக்கு தொலைபேசி மூலம் உங்களது தந்தை அகர முத்து மாரடைப்பால் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர் தொடர்ந்து அங்கு சென்ற மணிகண்டன் தனது தந்தை அகர முத்து தூக்கு மாட்டிக் கொண்டு இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கழுத்தில் காயம் உள்ளதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதனால் தனது தந்தை அகரமுத்துவின் மரணத்தில் மர்ம இருப்பதாகவும் பிச்சையம்மாள் குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் சோழவந்தான் போலீசாருக்கு புகார் அளித்தார் புகாரை பெற்ற போலீசார் பிணத்தை சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!