மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி சார்பாக பொது முகவர்கள் கூட்டம் அலங்காநல்லூர் பாலமேடு ரோட்டில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை தாங்கினார் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில்
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை எனது உடன் பிறந்த தம்பியாக தான் நினைக்கிறேன் பொதுக்குழு கூட்டத்தில் தலைவரிடம் எனக்கு எல்லாம் தந்தீர்கள் என்று கூறினேன் எல்லா வாய்ப்பையும் தமிழக முதல்வர் எனக்கு தந்தார் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதிலும் நலத்திட்டத்தை வழங்குவதில் மதுரை தான் முதலிடம் இன்று 20 மாவட்டம் திண்டுக்கல்லில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை 20 மாவட்டம் வரை ஒரு லட்சத்து 89 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது யாரும் வராமல் இருக்க கூடாது எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை முதலமைச்சர் சொல்லக்கூடிய கட்டளையை ஏற்று இந்த இயக்கத்தில் தலைவர் தலைவருக்கு பின் உதயநிதி என்ற நிலையில் மதுரை வடக்கு மாவட்ட திமுக உள்ளது தமிழக முதல்வர் சொல்லும் திட்டங்களை நிறைவேற்றும் முதல் மாவட்டமாக மதுரை வடக்கு மாவட்டம் உள்ளது. ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியுமா என்று கேட்டவர்கள் மத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே முழுமையாக பெண்கள் அதிக அளவில் ஆதரிக்க கூடிய ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர். கலைஞர் உரிமைத் தொகை 5 ஆயிரம் வழங்கிய ஒரே முதல்வர் தமிழ்நாடு முதல்வர். மகளிர் உரிமை தொகை விடியல் பயணம் என்று பல்வேறு மகளிர்காண திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். ஒரு கோடியே முப்பத்தியோரு லட்சம் பேருக்கு 5000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டு மக்கள் மீது குறிப்பாக தமிழக பெண்கள் மீது மிகப்பெரிய மதிப்பு தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் வைத்துள்ளார் தஞ்சாவூரில் நடந்த இளைஞரணி மாநாடு மிகப்பெரிய வெற்றி மதுரை வடக்கு மாவட்ட சார்பாக 10 ஆயிரத்து 500 பபேர் விருதுநகர் இளைஞர் அணி மாநாட்டுக்கு மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பாக கலந்து கொண்டோம். 2026 தேர்தலில் மதுரை வடக்கு மாவட்டம் 100% வெற்றியை பெற வேண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஏழாவது முறையாக பொறுப்பு ஏற்கும் போது தளபதி அவர்கள் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பார். இவ்வாறு பேசினார்




You must be logged in to post a comment.