பிப்ரவரி 21, 22இல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் கனமழைக்கு வாய்ப்பு.
2002ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் தற்போது தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் 21ஆம் தேதி கனமழை பெய்ய கூடும்.
வரும் 22ஆம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.




You must be logged in to post a comment.