17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கும் விழா..

இரமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கும் விழா..

எழுதியவர்: ஆசிரியர் June 9, 2018, 5:57 pm
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (09.06.2018) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில்  தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்டா மணிகண்டன் 75மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் உட்பட மொத்தம் 557பயனாளிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புக்கு மேலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
இந்த விழாவிற்கு மாவட்ட  ஆட்சித் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.  இவ்விழாவில் கலந்மாது கொண்டு உரையாற்றிய அமைச்சர் மணிகண்டன், தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றியும், இதுவரை முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவின் வழித் தடத்தை பின்பற்றி தற்போதைய அரசு மக்களுக்கு ஆற்றி வரும் பணிகளை பட்டியலிட்டு விளக்கினார்.
மேலும் பொதுமக்களின்க குடி நீர் தேவையினை பூர்த்தி செய்வதற்க்கு  395 புதிய குடிநீர் பணிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்,  113இடங்களில் உப்பு நீரை நல்ல நீராக்கும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்து என்ற பல மக்கள் நலப்பணிகளை தெரிவித்தார்.
 
இவ்விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 153 பயனாளிகளுக்கு ரூ.51.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,  மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக 14 பயனாளிகளுக்கு ரூ.86.79 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும்,  மகளிர் திட்டத்தின் சார்பாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.39 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் வழங்கினார்.
இவ்விழாவில்,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேலு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முட நீக்கு அலுவலர் ஜெய்சங்கர் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!