தென்காசி மாவட்டம் வடகரை ரஹ்மானியாபுரம் பகுதியில் உள்ள தொழிற்கல்வி நிலையத்தில் தையல் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட கவுன்சிலர் கனிமொழி இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி சான்றிழ்கள் வழங்கினார். தென்காசி தெற்கு மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தென்காசி மேற்கு ஒன்றியம், வடகரை பேரூராட்சி ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதியில் அபுபக்கர் சித்திக் (ரலி) அறிவுக் களஞ்சியம் அறக்கட்டளை சார்பில் தொழிற்கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது.


இந்த பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் கனிமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு அடித்தளமிடும் வகையில், அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த சுலைமான் சேட் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடகரை பேரூர் கழக திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ரஹ்மத்துல்லாஹ், வாவாநகர திமுக பிரமுகர் அப்துல்லா, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் தளபதி கண்ணன், பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் காசிராஜன், கழக மூத்த முன்னோடி ஆனந்த், பார்வதியாபுரம் வார்டு செயலாளர் கருப்பசாமி, பார்வதிபுரம் திமுக முருகையா நடராஜன், இளைஞர் அணி வார்டு அமைப்பாளர் அக்பர், சாகுல் ஹமீது, அமானுல்லா, செல்லப்பா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.