18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » வீணாகும் குடிநீர்.. நகராட்சி உடனடி நடவடிக்கை தேவை…

வீணாகும் குடிநீர்.. நகராட்சி உடனடி நடவடிக்கை தேவை…

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2018, 6:03 pm

கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொது குடி நீர் குழாயில் கேடு உண்டாகி, நீர் வீணாகியது, பின்னர் பலமுறை தொடர்பு கொண்டு புகார் அளித்த பின் தற்காலிக முறையில் பிளாஸ்டிக் குழாய்களை வைத்து சரி செய்யப்பட்டது.  மீண்டும் தற்பொழுது குடிநீர் கசிவு ஏற்பட்டு தெருக்களில் ஓடிய வண்ணம் உள்ளது.

அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை அழைத்து புகார் அளித்த பொழுது, இப்பணி தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, விரைவில் சரி செய்யப்படும் என்ற பதிலே வருகிறது.  மக்கள் அதிகாரிகளிடம் தான் புகார்களை தெரிவிக்க முடியும்,  தனியாரிடம் அல்ல..

நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மக்களின் குறையை தீர்க்குமா?? நான்கு மாதங்களுக்கு முன்னர் கீழைநியூசில் இதே இடத்தில் குழாய் கேடான பொழுது வெளியிட்ட செய்தி..

https://keelainews.in/2018/02/21/drinking-water-wastage/

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!