17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2018, 10:19 pm

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர்   முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயலாளர் லிங்கதுரை, மாவட்ட அமைப்பு செயலாளர் கனகராஜ், மகளிரணி செயலாளர் மகாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்ந ஆர்ப்பாட்டத்தில்  நிர்வாக மாற்றங்களை கைவிட்டு மீண்டும் பழைய நடைமுறைகளை தொடர வேண்டும்,  கலந்தாய்வு நெரிமுறைகளிலுள்ள குளறுபடிகளை களைய வேண்டும்,  ஆசிரியர்களின் பணி நிரவலை முற்றிலும் கைவிட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  முன்னதாக மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் இறுதியாக  சுடலைமுத்து நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!