18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நில ஆவணங்களை கணினியில் திருத்தம் செய்யும் முகாம்..ஆட்சி தலைவர் இடைத்தரகர்களுக்கு எச்சரிக்கை..

கீழக்கரை நில ஆவணங்களை கணினியில் திருத்தம் செய்யும் முகாம்..ஆட்சி தலைவர் இடைத்தரகர்களுக்கு எச்சரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2018, 1:46 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவல்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன் தலைமையில் நில ஆவணங்களை கணினியில் திருத்தம் செய்வது தொடர்பான முகாம் இன்று (07/06/2018) நடைபெற்றது.

இந்த முகாமில்  பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் .இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் சுகிபிரமிளா, கீழக்கரை வாட்டாட்சியர் ராஜேஸ்வரி, நலிந்தோர் உதவிதிட்ட வட்டாட்சியர் கார்த்திகேயன், துணை வட்டாட்சியர்கள் ஜலாலுதீன், இராமமூர்த்தி, வருவாய்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த முகாமில் உரையாற்றிய ஆட்சி தலைவர் நடராஜன், போலி பட்டா தயாரிக்க துணை போகும் நபர்கள் மற்றும் அரசாங்க வேலைகளுக்கு பணம் வாங்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!