17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நிறைய கூடுது! கொஞ்சம் குறையுது! வேற யாரு இந்த தங்கம் தான்..

நிறைய கூடுது! கொஞ்சம் குறையுது! வேற யாரு இந்த தங்கம் தான்..

எழுதியவர்: Askar February 13, 2026, 10:46 am

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வெள்ளிக்கிழமை காலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அசுர வேகத்தில் உயர்ந்து லட்சத்தைக் கடந்து உச்சத்தில் விற்பனையாகி வருகின்றது.

அந்த வகையில், கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை சவரன் ரூ. 116,640-க்கும், புதன்கிழமை ரூ. 118,320-க்கும், வியாழக்கிழமை ரூ. 1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ரூ. 1,15,200-க்கு விற்பனையாகி வருகின்றது. ஒரு கிராமின் விலை ரூ. 14,400.

இதனிடையே, வெள்ளியின் விலை நான்கு நாள்களுக்கு பிறகு கிராமுக்கு ரூ. 20 குறைந்து, ரூ. 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,80,000 ஆக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!