17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்து சமய அறநிலைத்துறை சார்பாக மூத்த தம்பதியர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி

இந்து சமய அறநிலைத்துறை சார்பாக மூத்த தம்பதியர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan February 10, 2026, 1:46 pm

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக மூத்த தம்பதியர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 70 வயது நிரம்பிய மூத்த தம்பதியர் 20 பேர் தம்பதி சகிதமாக நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக வேட்டி சேலை வளையல் உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடம் பொதுமக்கள் பக்தர்கள் ஆசி பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி இளமதி சரக ஆய்வர் ஜெயலட்சுமி கோவில் கணக்கர் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் மற்றும் பலர் செய்திருந்தனர். முன்னதாக திருக்கோவில் அர்ச்சகர் சண்முகவேல் ஸ்ரீஜெனகை மாரியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!