17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேனி மாவட்டம் பெரியகுளம் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் ஒரே ஒரே நபர் திருக்குர்ஆன் முழுவதும் மணனமாக ஓதும் நிகழ்ச்சி..

தேனி மாவட்டம் பெரியகுளம் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் ஒரே ஒரே நபர் திருக்குர்ஆன் முழுவதும் மணனமாக ஓதும் நிகழ்ச்சி..

எழுதியவர்: Askar February 10, 2026, 12:59 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் ஒரே ஒரே நபர் திருக்குர்ஆன் முழுவதும் மணனமாக ஓதும் நிகழ்ச்சி..

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இறையியல் கல்வி மற்றும் பள்ளி, கல்லூரி படிப்பும் சேர்த்து படித்து வருகின்றனர்.

இக்கல்லூரியில் பயின்ற மாணவர் முக்ஸித் மீரான் என்பர் காலையில் ஆரம்பித்து மாலை வரை மணனமாக முழுக் குர்ஆன் முழுவதையும் ஓதி சாதனை படைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சி கல்லூரியின் தலைவர் அபுதாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் வரவேற்புரை கல்லூரியின் நிறுவனர்& முதல்வர் முஹம்மது ஹுசைன் ஹஜ்ரத் அவர்கள் ஆற்றினார்.

துவக்கவுரை அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் ஆற்றினார்.


முஜிபுர் ரகுமான் ஹஜ்ரத், அமீர் தங்கள் ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

நன்றியுரை அப்துல் அஹத் ஹஜ்ரத் அவர்கள் ஆற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பல்வேறு முக்கியஸ்தர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

காலை உணவு, தேனீர், மதிய உணவு, மாலை தேனீர் என சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் முடிவில் பாராட்டு விழா நடைபெற்றது இதில் குர்ஆன் ஓதிய மாணவருக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!