17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சின்னாளபட்டி பேரூராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

சின்னாளபட்டி பேரூராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

எழுதியவர்: Askar February 10, 2026, 8:35 am
 
சின்னாளபட்டி பேரூராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக அரசு உத்தரவுப்படி, தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, திங்கள்கிழமை  தொடங்கி வைத்தார்.
 
திண்டுக்கல் மாவட்டம்,  சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில்,தமிழக அரசு  உத்தரவுப்படி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு, சின்னாளப்பட்டி  பேரூராட்சி மன்ற தலைவர் பிரதிபா கனகராஜ் தலைமை வகித்தார்.
 
பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி  60-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு  உணவுத்திட்டமான ஊடச்சத்து மிக்க உணவுத் தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில்  திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் க.நடராஜன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக  செயலாளர் முருகேசன், பேரூர் திமுக  பொறுப்புக்குழு  நிர்வாகிகள்  மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள்,வார்டு திமுக  செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
அதேபோல், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில்,  தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கும்  நிகழ்ச்சிக்கு, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் எஸ்.பி.எஸ்.செல்வராஜ் தலைமை வகித்து தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் பூங்கொடிமுருகு, திமுக பேரூர் கழகச் செயலாளர் ராஜாங்கம், துணைத் தலைவர் விமல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார்,.  நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஊடச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்பட்டது. முடிவில், துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!