18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » இராமநாதபுரத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2018, 7:43 pm
இராமநாதபுரத்தில் இன்று (28-05-2018)  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம்  இராமநாதபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் முருகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நெசவாளர் அணி இணை செயலாளர்  கோதை மாரியப்பன், தெற்கு மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்கி, வழக்கறிஞர் தர்மா, தேமுதிக பிரமுகர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மகாலில் அடைத்து பின்பு விடுவிக்கப்பட்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!