அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., தலைமையில் இன்று (09.02.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 372 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சொந்தமாக வீட்டு மனை உள்ளவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள 6 பயனாளிகளுக்கு தலா ரூ.4,00,000 (ரூபாய் நான்கு இலட்சம்) என மொத்தம் ரூ.24,00,000 மதிப்பில் மானியத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில்; பணிபுரியும் 6 வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு திட்டப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.53,389 மதிப்பில் ஓரு வட்டாரத்திற்கு ஒரு மடிக்கணினி வீதம் 6 மடிக்கணினிகள் மற்றும் நகர்புறத்திற்கு 2 மடிக்கணினிகள் என மொத்தம் ரூ.4,27,112 மதிப்பில் 8 மடிக்கணினிகளும் மற்றும் 01 மாற்றுத்திறன் நபருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரூ.9000 மதிப்பிலான சக்கர நாற்காலி என மொத்தம் ரூ.4,36,112 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You must be logged in to post a comment.