தென்காசி மாவட்டத்தில் ஒன்றிய அரசின் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரியங்காவூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கடந்த ஓராண்டாக நாட்டார்பட்டி, பூவனுார், ஆரியங்காவூர் சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒன்றிய அரசின் ரயில்வே நிர்வாகம் சார்பில் இதுவரை நடவடிக்கை இல்லாததால் தற்போது நாட்டார்பட்டி, பூவனுார், ஆரியங்காவூர் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்திலிருந்து ஆரியங்காவூர் மற்றும் நாட்டார்பட்டி செல்லும் பாதையில் இரு ரயில்வே கேட்கள் உள்ளன. இந்த இரண்டு கேட்டுகளும் மணிக் கணக்கில் மூடப்படுவதால் நாட்டார்பட்டி, பூவனூர், ஆரியங்காவூர் சுற்று வட்டார கிராம மக்கள் திப்பணம்பட்டி மற்றும் ஆரியங்காவூர் ரயில்வே கேட்களில் காத்துக் கிடக்கும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் திப்பணம்பட்டி- ஆரியங்காவூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளன. திப்பணம்பட்டி சுற்று வட்டார மக்களின் கோரிக்கையை ஏற்று, 10 நாட்களுக்குள் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் வரும் 20ஆம் தேதி மக்கள் பிரதிநிதிகளை திரட்டி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.