17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..

இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..

எழுதியவர்: Askar February 8, 2026, 8:58 pm

இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 நபர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08.01.2026 ம்தேதி யாகப்பன்பட்டியைச் சேர்ந்த ஜேசுராஜ் (41) மற்றும் அவரது மனைவி சவுந்தர்ய ஞானதீபிகா (32) ஆகியோரை முன்பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த 1)ஞானராஜ் (54), 2)தர்மராஜ் (51), 3)அந்தோணி ஆரோக்கியசாமி (35), 4)ஜான் பீட்டர் (42), 5)அருள்ராஜ் (60), 6)மணிகண்டன் (19), 7)மைக்கேல்ராஜ் (31), 8)ராபின் தினேஷ்குமார் (27), 9)சேவியர் ஆல்பர்ட் (20) ஆகியோர் கொலை செய்தனர். இதையடுத்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் 9 நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் உலகநாதன் வேண்டுகோளின் படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேற்கண்ட 09 நபர்களையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று (07.02.2026) உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் மேற்கண்ட 09 நபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை 14 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!