18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » நாம் தமிழர் கட்சி சார்பாக சுட்டுக்கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு வீர வணக்கம்…

நாம் தமிழர் கட்சி சார்பாக சுட்டுக்கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு வீர வணக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2018, 8:49 pm
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற மக்கள் மீது அரசாங்கத்தால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 12 பேர் பலியாயினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் பல இன்னல்களுக்கு ஆளாகினர்.
இச்செயலை கண்டிக்கும் விதமாகவும், மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இன்று  (26/05/2018 மாலை 6:00 மணியளவில் கீழக்கரை புதியபேருந்துநிலையம் அருகில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி கீழக்கரை நாம்தமிழர்கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தபட்டது.
இந்த நிகழ்வில் நாம்தமிழர்கட்சி நகர் செயலாளர் பிரபாகரன், இனைச்செயலாளர் ஹபில் ரஹ்மான், தலைவர் சுகுமார், துனைதலைவர் காசிம், இளைஞர்பாசறை செயலாளர் வாசிம் அக்ரம், இ.பாசறை இனைச்செயலாளர் இக்ரம்தீன்,  நகர் தொழிலாளர் பாசறை பழனிபாபா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  மேலும் பல நகர் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு மாவீரர் அனைவ்ருக்கும் வீரவணக்கம் செலுத்தினர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!