வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 19) இவர் தாதம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம் போல் வேலை முடிந்து விட்டு மனோஜ் குமாரின் பிறந்த நாளை கொண்டாட மனோஜ் குமாரும் அவரது நண்பர் பிரபு (18) இருவரும் மோட்டார் சைக்கிளில் வாடிப்படியில் இருந்து கச்சைகட்டிக்கு சென்று கொண்டு இருந்தனர்.அப்போது அந்த பகுதியில் உள்ள முனியாண்டி கோவில் முன்பாக சென்றபோது திடீரென்று எதிர்பாராத விதமாக எதிரே வந்த பாலகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த சுரேஷ் (41) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியதில் மனோஜ்குமார் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காயமடைந்த சுரேஷ்,பிரபு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வாடிப்பட்டி அருகே பிறந்தநாளில்மோட்டார் சைக்கிள்கள்விபத்தில் வாலிபர் பலி
எழுதியவர்: mohan February 8, 2026, 4:38 pm




You must be logged in to post a comment.