17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருவண்ணாமலை அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி;மாநில விளையாட்டு போட்டிக்கு தேர்வு..

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி;மாநில விளையாட்டு போட்டிக்கு தேர்வு..

எழுதியவர்: Askar February 8, 2026, 2:11 pm

திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் ஜெயம் கல்வியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான செலக்சன் சதுரங்க போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைவர் ராஜா, செயலாளர் தமிழரசன், பொருளாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலையில் போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வீரர்கள் U7 மாணவர்கள் பிரிவு1.மாதேஸ்வரன்,2 குரு சாய் ,U9 மாணவர்கள 1 ஜெய் ஆதித்யா, 2 இன்பா நவீன், U11 மாணவர்கள் 1 சூரிய தேவ் , 2 திவாஸ், U13 மாணவர்கள்1 ஆதன் சைப், 2 சிவசரன, U15 மாணவர்கள் 1 நிதீஷ் குமார், 2 குருநாதன், U7 மாணவியர்கள 1 அஸ்விதா ஸ்ரீ, U9 மாணவியர்கள்1 கோவர்தன,2 இசை இனியா , U11 மாணவியர்கள்1 மகா ஸ்ரீ நற்பவி, 2 நிரஞ்சனா மித்ரா , U13 மாணவியர்கள்1 ஹாசினி, 2 ப்ரீத்தி, U15 மாணவியர்கள்1 யுவஸ்ரீ , 2 பவிஷ்யா மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் ராஜசேகரன், ஜெயம் கல்வி நிறுவனம் சுமித்ரா தேவி, முன்னாள் செயலாளர் தண்டபாணி, முன்னாள் செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!