கடலூரில் இந்திய ஜனநாயக கட்சியின் நாலாவது மாநில மாநாடு அக்கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் இன்று நடைபெறுகிறது .இதில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்வதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி மாநில துணை அமைப்புச் செயலாளர் பிரபு ராஜா , மாவட்டபொருளாளர் வினோத்குமார் ,மாவட்ட செயலாளர் காளிராஜ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக வத்தலகுண்டு சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உசிலம்பட்டி தேவர் சிலை,மூக்கையா தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,இதன் பின்னர் 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் கடலூரில் நடைபெறும் கட்சி மாநாடுக்கு எழுச்சியுடன் புறப்பட்டு சென்றனர். இதில் மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட இணை தலைவர் நதியா, மாவட்ட கலைத்துறை பிரிவு அணி செயலாளர் செல்லம் கருப்பு, மாவட்ட கலைத்துறை அணி துணைச் செயலாளர் ஆத்தாடி குமரன், உசிலம்பட்டி நகர தலைவர் பழனி, செயலாளர் கார்த்திக், துணைத் தலைவர் பாண்டித்துரை, உசிலம்பட்டி தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பசுபதி, உசிலை நகர துணைத் தலைவர் விஜயன், உசிலை வடக்கு ஒன்றிய தலைவர் செல்லப்பாண்டி, உசிலை நகர கலைத்துறை பிரிவு அணி செயலாளர் கார்த்திகை தீபா, உசிலை வடக்கு ஒன்றிய கலைத்துறை பிரிவு அணி செயலாளர் முத்துசாமி உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்தியஜனநாயக கட்சி 4வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக உசிலம்பட்டி ஐ ஜே கே நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் உசிலம்பட்டியில் இருந்து கிளம்பி சென்றனர்
எழுதியவர்: mohan February 8, 2026, 1:12 pm




You must be logged in to post a comment.