17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சுபோலீசார் விசாரணை

சோழவந்தான் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சுபோலீசார் விசாரணை

எழுதியவர்: mohan February 8, 2026, 1:08 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங் கோட்டை பகுதியில் முத்தையா என்பவரது வீட்டில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது

வீட்டில் திடீர் சத்தம் ஏற்பட்டவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டில் மதில் சுவரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அடையாளங்கள் மற்றும் ஜன்னல் வழியாக உள்பக்க கதவு மேல் பெட்ரோல் குண்டு பட்டதில் கதவு பகுதியில் லேசான சேதம் உள்ளிட்டவை இருந்துள்ளது

இரவு நேரம் அதிகாலை என்பதால் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என தெரியாத நிலையில் உடனடியாக முத்தையா என்பவரது மகன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் இதனை அடுத்து சோழவந்தான் காவல்துறையினர் முத்தையா என்பவரது வீட்டில் வந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதியை பார்வையிட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அருகில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர் மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர் பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார் என்று தெரியாத நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த 2024 ஆம் ஆண்டு இதேபோன்று இந்த பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தற்போது தொடர்ச்சியாக அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற்று வருவது இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள கடையின் மேல் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசியதில் கடையின் மேற்பகுதி தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக சோழவந்தான் பகுதியில் அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது இந்த பகுதி பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு செய்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் மேலும் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!