இன்று நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைப்பு: தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி என புகார்.
சென்னையில் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2a முதன்மை தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு.
அரும்பாக்கத்தில் தேர்வு எழுதவிருந்தவர்களுக்கு நந்தனம் கல்லூரியில் தேர்வு மையம் மாற்றப்பட்டதால் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர்.
முன்னறிவிப்பின்றி தேர்வு மையம் மாற்றப்பட்டதாகக் கூறி தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சார்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
தேர்வு மைய குளறுபடி புகாரால் சென்னையில் மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.




You must be logged in to post a comment.