17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனுஸ்கோடி அருகே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்.. உறவினர்கள் சாலை மறியல்..

தனுஸ்கோடி அருகே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்.. உறவினர்கள் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2018, 8:28 pm

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஸ்கோடி அருகேயுள்ள புதுரோடு பகுதியில் உள்ள சுனாமி காலணியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இந்த வீட்டில் அவரின் தம்பி பாலமுருகனும் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இன்று அதிகாலை வீட்டின் மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது அக்காள் செல்வி அக்கம் பக்கத்தில் உள்ள வர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கூறினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைபற்றி இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு எடுத்து சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் இளைஞர் பால முருகனின் இறப்பில் சந்தோகம் உள்ளதாகவும்,இறப்பிற்க்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும், அவரின் உறவினர்கள் பாலமுருகனின் உடலை வாங்க மறுத்து தனுஸ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தீடீரென  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் இதனை யடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த அரை மணிநேர திடீர் சாலை மறியலால் தனுஸ்கோடிக்கு  சுற்றுலா வந்த  சுற்றுலா பயணிகள் தனுஸ்கோடி செல்ல முடியாமல் நடுவழியில் அவதியுற்றனர். இச்சம்பவம் குறித்து தனுஸ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!