திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீசக்தி பாலிடெகனிக கல்லூரியில் 13வது பட்டயம் அளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் அக்ரி. எஸ்.வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். செல்வ நாராயண ரெட்டியார் கல்வி அறக்கட்டளை துணைத் தலைவர் பாலகிருஷ்ணா, பொருளாளர் புனிதா பாலகிருஷ்ணன், செயலாளர் திலகவதி ரவிக்குமார், உறுப்பினர் அம்பிகாபதி, சுந்தரமூர்த்தி, ஆப்ரதேவே ஐஸ்வர்யா மூர்த்தி, மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியில் இயக்குனர் ரேகா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் செந்தில் முருகன் வரவேற்று பேசினார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிஅரசர் நக்கீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 245 மாணவர்களுக்கு பட்டயமும், மாநில அளவில் வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவர்களுக்கு ரூ.80ஆயிரம் ரொக்க பரிசுகளும், பேராசிரியர்களுக்கு ரூ.20,500 ஊக்கப் பரிசுகளும் வழங்கி பேசினார். அப்போது இந்த கல்லூரியில் 13ஆம் பட்டயம் அளிப்பு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தூய்மையான சுற்றுச்சூழல், கல்லூரி அமைந்திருப்பது மாணவர்கள் நீங்கள் பயன்படுத்தி நன்கு படித்து முன்னேறி பெற்றோருக்கும் கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் செல்போன் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதனை கற்றல் உபயோகத்திற்கு மட்டும் நல்ல தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அறிவை வளர்த்துக் வேண்டும் என பேசினார்.
ஆன்மீக சொற் பொழிவாளர் தனஞ்செயன் விழாவினை தொகுத்து வழங்கி பேசினார். முடிவில் ஆங்கில விரிவுறையாளர் அலெக்சாண்டர் நன்றி கூறினார். விழாவில் மண்மலை கூட்டுறவு வங்கியின் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, வழக்கறிஞர்கள் விஜயகுமார், செல்வம் மற்றும் பெற்றோர்கள், பேராசரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-மா.சரவணகுமார், திருவண்ணாமலை மாவட்டம்.




You must be logged in to post a comment.