மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பால் உற்பத்தி தொழிற்சாலை முன்பாக திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி மோதி 55 வயது மதிக்கத்தக்க முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் யார் எந்த ஊர் என்று தெரியவில்லை. கோடு போட்ட வெள்ளை நிற அரை கை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். கட்டை பையில் துணிமணிகள் இருந்தது. இதுகுறித்து நகரி கிராம அலுவலர் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார்,சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
லாரி மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி
எழுதியவர்: mohan February 7, 2026, 11:01 am




You must be logged in to post a comment.