17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல், இரண்டு ரௌடிகள் படுகொலை..

இராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல், இரண்டு ரௌடிகள் படுகொலை..

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2018, 2:16 pm

இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாலாந்தரவையை சேர்ந்த இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட  மோதலில் இரண்டு நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பூமி நாதன், (அகமுடையார்) S/o முனியசாமி, போலயன்நகர், வாலாந்தரவை இராமநாதபுரம் மற்றும் விஜய்,S/o ராமசாமி, போலயன்நகர், வாலாந்தரவை ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சலீம் (எ) விஜய், S/o ராஜேந்திரன், போலயன்நகர்,வாலாந்தரவை என்பவர் படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தினை தொடர்ந்து  இராமநாதபுரம் சரக DIG நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இறந்தவர்களின் உடல்கள் இராமநாதபுரம் மாவட்டம் தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

இது சம்பந்தமாக இராமநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!