17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாதக்கணக்கில் எரியாமல் கிடக்கும் வடக்குத் தெரு முக்கிய பகுதி தெரு விளக்கு..

மாதக்கணக்கில் எரியாமல் கிடக்கும் வடக்குத் தெரு முக்கிய பகுதி தெரு விளக்கு..

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2018, 2:52 am

கீழக்கரை வடக்குத் தெரு தைக்கா அமைந்து இருக்கும் பகுதியில் உள்ள மெர்குரி விளக்கு கடந்த 45 நாட்களுக்கு மேலாக வேலை செய்யாமல், கவனிப்பாரற்று கிடக்கிறது.  நோன்பு நேரம் என்பதால் இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும், ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இது சம்பமந்தமாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “ இது சம்பந்தமாக இப்பகுதி மின்சார வாரிய ஊழியரிடம் பலமுறை முறையிட்டு விட்டோம், ஆனால் எப்பொழுதும் இதற்கான பாகங்கள் வர 25 நாட்களுக்கு மேலாகும் என்று மாதக் கணக்கில் கூறி வருகிறார்” என வேதனையுடன் கூறினார்.

பொதுமக்களின் நலன் கருதி மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!