17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது, துணை முதல்வர் இராமேஸ்வரத்தில் பேட்டி..

தமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது, துணை முதல்வர் இராமேஸ்வரத்தில் பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2018, 2:35 am

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு இன்று(20/05/2018) மாலை வந்த  தமிழக துணை முதல்வர் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்ட தனியார் சொகுசு விடுதியினை குத்துவிளக்கேற்றி  திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துனை முதல்வர், ”தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டுடிருக்கின்ற  அம்மாவின் அரசு, ஒரு பொறுப்பான அரசாங்கமாக செயல்பட்டு வருகிறது.  தமிழக அரசு  தமிழக மக்களின் நலன்களில் அக்கறையுள்ள அரசாகவும்,  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், அம்மா ஜெயலலிதா அவர்களின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி  வருகிறார்.

மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்க்கு நல்ல பலன் கிடைதுள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவருடைய வேலையை அவர் செய்துகொண்டு இருக்கிறார், நாங்கள் எங்களது வேலையை செய்து கொண்டுள்ளோம் என தெரிவித்தார். மேலும்  இவ்விழாவில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!