18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » சமுதாயப் பணி புரிபவர்களை கௌரவிக்கும் விதமாக ரோட்டரி சங்கம் விருது..

சமுதாயப் பணி புரிபவர்களை கௌரவிக்கும் விதமாக ரோட்டரி சங்கம் விருது..

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2018, 2:25 am

கீழக்கரை ரோட்ரி சங்கங்கத்தின் வருடாந்திர கூட்டம்  இன்று (20/05/2018) மாலை முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது.  இந்த விழாவிற்கு ரோட்டரி சங்க கவர்னர் சின்னத்துரை அப்துல்லா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் சமுதாயப் பணிகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வண்ணமாக சமூக  சேவைக்கான விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

வங்கியில் மக்கள் சேவை சிறப்பாக ஆற்றிய  கீழக்கரை இந்தியன் வங்கி மேலாளர், அரசு மருத்துவமனை  செவிலியர் மணிமேகலை, வேலைவாய்ப்பு வழங்குவதில்  சிறந்து விளங்கும் கீழக்கரை கிளாசிஃபைட்   SKV சேக், அவரச ஊர்தி ஆம்புலன்ஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றும் ஓட்டுனர்கள்  அசாரூதீன், நசுரூதீன் மற்றும் பிரவின் ஆகியோருக்கு விருதும், நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், துணை கவர்னர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், தலைவர் பாலசுப்ரமணியம், செயலாளர் தர்மராஜ் மற்றும் இன்னும் பல நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!