புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு! உடலை துளைத்த குண்டுகள்
எழுதியவர்: ஆசிரியர் February 6, 2026, 9:32 pm

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்சேவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அலெக்சேவ், நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டின் காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



You must be logged in to post a comment.