18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

எழுதியவர்: mohan February 6, 2026, 12:21 pm

வாடிப்பட்டி அருகே குட்லாடம் பட்டி ரமணாலய.ஆசிரமம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு சிவராத்திரிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து தர பக்தர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி தாடகை நாச்சியார் அருவி அருகே ரமணாலயம் ஆசிரமம் உள்ளது. இங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தியபாதையை திடீரென ஒரு தரப்பினர் மறித்ததாக கூறப்படுகிறது இதனால் சிரமத்தில் இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல இடங்களுக்கு மனு செய்தனர் மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் நேரடியாக வந்தனர் அப்போது ரமண ஆலய பக்தர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர் தொடர்ந்து பார்வையிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிவதாக கூறி விரைவில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர் அங்குள்ள பக்தர்கள் தற்போது ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்பு முறையாக அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்ற வருவாய்த் துறையினரின் கோரிக்கையை ஏற்று விரைவில் மகா சிவராத்திரி வர உள்ளதால் அதற்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி வேண்டுகோள் விடுத்தனர். அங்குள்ள பக்தர்களிடம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர். பத்திரையில் வழிபாட்டுக்கு இடையூறாக பாதையை ஆக்கிரமித்து உள்ளதால் ஆசிரமத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறிய பக்தர்கள் விரைவில் வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!