அலங்காநல்லூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகும் அவலம்.குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தெத்தூர் ஊராட்சியில் சுமார் 3000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய தெருவில் ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் குடிநீரானது தெருக்களில் ஆறாக ஓடுகிறது மேலும் அந்தப் பகுதியில் உள்ள கழிவு நீர் குடிநீரில் கலப்பதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது
இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலேயே குடிநீரும் கழிவு நிரும் கலந்து செல்லும் நிலை உள்ளதால் பொதுமக்கள் குழந்தைகள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்
இது குறித்து தெத்தூர் ஊராட்சி செயலாளர் அலங்காநல்லூர் யூனியன் அலுவலர் மதுரை மாவட்ட ஆட்சியர் என அனைவரிடத்திலும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது
சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக தெருக்களில் வீணாகி செல்லும் குடிநீரை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
தினசரி காலை 6 ஆறு மணிக்கு ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் தொடங்கியவுடன் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக குடிநீர் ஆறாக ஓடுகிறதுதினசரி காலை 6:00 மணி முதல் 8 மணி வரை இந்த நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது
இதன் காரணமாக இந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்களிடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டு சாலைகளில் கற்களை போட்டு சாலையில்யாரும் போகாதவாறு அடைத்து வைக்கக்கூடிய நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறதுஇதன் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாக இந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்
குடிநீரும் கழிவு நீரும் கலந்து செல்லும் பகுதியின் அருகிலேயே ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது தினசரி பணியாளர் வந்து தங்கள் பணிகளை செய்து விட்டு செல்கின்றனர்
தனியார் நிறுவன வேலைகளுக்கு செல்லும் பெண்கள் தங்கள் வாகனங்களை இந்த பகுதிக்கு கொண்டு வரும்போது சேரும் சகதியுமான பகுதியில் சென்று வாகனங்களில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது
உடனடியாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து பொதுமக்களை தொற்று நோய் உள்ளிட்ட ஆபத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் யூனியன் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




You must be logged in to post a comment.