மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பேருந்துகள் இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே பேருந்தில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பேருந்திக்குள் நிற்க கூட இடமில்லாமல் பெண்கள் மற்றும் வயதானவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான தென்கரை முள்ளிப்பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை இரும்பாடி கருப்பட்டி கரட்டுப்பட்டி நாச்சிகுளம் தச்சம்பத்து திருவேடகம் மேலக்கால் தேனூர் ஆகிய பகுதிகளில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்காக அவரது உறவினர்களும் தினசரி ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றனர் இந்த நிலையில் கருப்பட்டி முதல் அண்ணா பேருந்து நிலையம் வரை நாச்சிகுளம் முதல் அண்ணா பேருந்து நிலையம் வரை குருவித்துறை முதல் அண்ணா பேருந்து நிலையம் வரை சோழவந்தானிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை வழியாக மாட்டுத்தாவணிக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இந்த பேருந்துகளில் சில பேருந்துகள் காலை நேரங்களில் வருவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர் மேலும் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நேரங்களை தவிர்த்து பத்து மணிக்கு மேல் வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர் காலை ஏழு முப்பது மணி முதல் 11 மணி வரை மட்டுமே புற நோயாளிகள் பிரிவு செயல் படுவதால் காலை 6 மணி முதல் 9 மணி வரை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் நேற்று காலை குருவித்துறையில் இருந்து மாட்டுத்தாவணி சென்ற 93 என்ற ஒரு பேருந்து மட்டுமே சென்றதாகவும் அந்த பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நெரிசலில் சிக்கி பல்வேறு சிரமத்துடன் பயணம் செய்ததாகவும் புகார் தெரிவித்துள்ளனர் கருப்பட்டியில் இருந்து செல்லக்கூடிய பேருந்தும் நாச்சிகுளத்தில் இருந்து செல்லக்கூடிய பேருந்தும் வாரத்தின் சில நாட்களில் வராததால் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் மேலும் ஒரு சில பேருந்துகள் நேரமின்மை காரணமாக சமயநல்லூர் வரை வந்து திரும்பி விடுவதாகவும் இதன் காரணமாக சோழவந்தான் பகுதியில் காத்திருக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் கூறுகின்றனர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் சிரமங்களை குறைக்கும் வகையிலும் தினசரி காலை 6:00 மணி முதல் 9 மணி வரை சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வழியாக அண்ணா பேருந்து நிலையம் மற்றும் மாட்டு தாவணிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர் பேருந்து இல்லாத நிலையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் பேருந்துக்காக நூற்றுக்கணக்கில் பெண்கள் வயதானவர்கள் காத்திருப்பதும் வருகின்ற ஒரு சில பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்வதும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது
சோழவந்தானிலிருந்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
எழுதியவர்: mohan February 5, 2026, 8:53 pm




You must be logged in to post a comment.