கீழக்கரை நகராட்சி புதிய கட்டிடம் அவசியம் என்பதை வலியுறுத்தி அரசுக்கு நகர்மன்றம் சார்பாக கோரிக்கை வைத்தோம். இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினரும் எங்களது கோரிக்கையை அரசுக்கு முன்மொழிந்தார்.
அதன்பலனாக கீழக்கரை நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்திற்கும் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு சிரமம் தரும் போக்குவரத்து பிரச்சனைக்கும் தீர்வு எட்டுவது போல்
தமிழக அரசர்
இராமநாதபுரம் மாவட்டத்திற்கான பல திட்ட அறிக்கையில் ₹4.32/ கோடிகளுக்கான உத்தரவு அமுலானது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய கட்டிடம் கட்டும் முயற்சியில் இடம் தேடி செல்வந்தர் பலருக்கும் கோரிக்கை பலமுறை கோரிக்கை வைத்தேன்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பில் இடம் தருவதை இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கீழக்கரை நகராட்சி புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும், விரைவில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு கீழக்கரை வாழ் மக்களுக்கு இச்செய்தி வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.




You must be logged in to post a comment.