17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » செய்திகள் » திருவேடகம் ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா

திருவேடகம் ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா

எழுதியவர்: mohan February 4, 2026, 12:46 pm

சோழவந்தான் அருகே திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில் 33 ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது விழாவையொட்டி காலை சுவாமி மற்றும் அம்பாள் திருக்கோவிலில் இருந்து பிரம்ம தீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டது தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் செய்யப்பட்டது மதியம் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தொடர்ந்து மாலை விசேஷ அலங்காரத்தில் தீபாராதனை செய்யப்பட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மின் அலங்காரத்தில் சுவாமியும் அம்பாளும் ரதவீதிகளில் வலம் வந்து அருள்பாளித்தனர். இதில் திருவேடகம் சோழவந்தான் மேலக்கால் தேனூர் மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை அறங்காவலர் சேவகன் செட்டியார் நிர்வாக அதிகாரி சரவணன் மற்றும் கிராம பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!