17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லாரி மீது லாரி மோதி டிரைவர் பலி

லாரி மீது லாரி மோதி டிரைவர் பலி

எழுதியவர்: mohan February 3, 2026, 3:26 pm

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சிட்டா நல்லி அஞ்சல் பிலிக்காட்டைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் ராமமூர்த்தி (வயது 32). லாரி டிரைவர். அதேபோல் தர்மபுரி மாவட்டம் சிட்டா நல்லி சேர்ந்த ராம்ஜி மகன் முரளி (30) லாரி டிரைவர்.
இருவரும் ஓசூரிலிருந்து சிவகாசிக்கு ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த கம்பெனிக்கு ஈயக் கட்டிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அந்த லாரிகள் வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் தனியார்
ஹோட்டல் முன்பாக நின்று கொண்டிருந்த கார் மீது மோதாமல் இருக்க திடீரென்று லாரி டிரைவர் முரளி பிரேக் அடிக்க, அப்போது பின்னால் ராமமூர்த்தி ஓட்டி வந்த லாரி முரளி ஓட்டி வந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில்லாரி முன்பகுதி முட்டை கூடு போல் நொறுங்கியது. இந்த இடிபாடுகளில் சிக்கி ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலை அதிகாரி (பொறுப்பு)ஆல்பர்ட் பிரான்சிஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இடுபாடு களில் சிக்கி இருந்த லாரி டிரைவர் ராமமூர்த்தி
உடலை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு பிரதேபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!