மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேலக்கால் திருவேடகம் மன்னாடிமங்கலம் குருவித்துறை தென்கரை முள்ளிப்பள்ளம் மற்றும் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ வசதியும்
குறிப்பாக இந்தப் பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு உதவி பெறக்கூடிய வகையில் பரிசோதனைகள் மற்றும் மகப்பேறு மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டுவருகிறது
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முக்கிய அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ள இதன் அருகில் வைகை ஆற்றில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய நிலையூர் கால்வாய் செல்கிறது
இந்த நிலையூர் கால்வாய்க்கு மேலக் காலில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய நிலங்களில் செல்லக்கூடிய நீரானது நிலையூர் கால்வாயில் சென்று சேருகிறது
ஆனால் இந்த கால்வாயில் பல ஆண்டுகளாக மலை போல் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது
பல வருடங்களாக இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது
குறிப்பாக வாரத்தின் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு பரிசோதனைக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர்
அவ்வாறு வருபவர்கள் குப்பை கழிவுகளால் பெரிய அளவில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்
இதுகுறித்து அருகில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குப்பை கழிவுகளை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் புகார் அளித்தும்
ஊராட்சி செயலாளரின் மெத்தன போக்கால் குப்பை கழிவுகள் மலை போல் தேங்கி கிடக்கிறது
மேலும் பெரிய அளவில் துர்நாற்றம் வீசி கர்ப்பிணி பெண்களின் உடல்நலம் பாதிக்க கூடிய அளவிலும் இதன் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப்படும் நிலையில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு எதிர்கால சந்ததிகளாக பிறக்கும் குழந்தைகளுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்
மேலும் ஊராட்சியில் உள்ள செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் உடனடியாக ஆய்வு செய்து ஊராட்சியில் உள்ள அடிப்படை தேவைகளை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள பகுதிகளை தூய்மைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறையுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதியும் இல்லாத நிலையில் இங்கு பரிசோதனைக்கு வரும் தாய்மார்கள் குடிநீரின்றி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்
ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சின்டெக்ஸ் தொட்டியும் பல மாதங்களாக செயல்படாமல் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் புகார் தெரிவிக்கின்றனர்
ஆகையால் சுமார் 50,000 பொதுமக்கள் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் என மருத்துவ பரிசோதனைக்கு ஆதாரமாக உள்ள மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை போர்க்கால அடிப்படையில் மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்




You must be logged in to post a comment.