17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » விளையாட்டு செய்திகள் » செய்திகள் » காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan January 31, 2026, 11:08 am

ஒரு காலத்தில் அதிமுக பாஜகவை மிரட்டியது அது அந்த காலம் ஆனால் அமித்ஷா அதிமுகவாக மாறிய பின்பு கும்பிடறேன் சாமி கும்பிடறேன் சாமி என அதிமுக மாறிவிட்டது

இதனாலேயே மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றப்பட்டது

விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு

மதுரை மாவட்டம் செக்கானூரரணியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேசும்போது

100 நாள் வேலையானது வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு இருக்காது மோடி அரசு 100 நாள் வேலையை காலி செய்து விட்டார்கள் இதற்கு அதிமுகவும் உடந்தையாக உள்ளது மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்தில் தம்பித்துறையும் தருமரும் கையெழுத்து போடாமல் இருந்திருந்தால் அந்த தீர்மானம் நிறைவேறி இருக்காது அவர்கள் கையெழுத்து போடாமல் அதிமுக பாஜகவை மிரட்டி பணிய வைத்து இருக்கலாம்

அப்படி பணிய வைத்தது ஒரு காலம் ஆனால் இன்றைக்கு அமித்ஷா அதிமுகவாக மாறிய பின்பு பாஜகவுக்கு கும்பிடு போடும் கட்சியாக மாறிவிட்டது இதன் காரணமாகவே 100 நாள் வேலை ஏப்ரல் ஒன்னாம் தேதிக்கு பிறகு இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது

அதனால் 100 நாள் வேலை பெயர் மாற்றத்தை கண்டித்து இந்தியா முழுவதும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்ததால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

ஆனால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சோனியா காந்தி ராகுல் காந்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை பொருத்தவரை இந்த வேலையை பாதுகாக்க வேண்டும் அதற்கு பணம் வர வேண்டும் ஆனால் பணம் கொடுக்கும் மத்திய அரசுடில்லியில் இருந்து தான் பணம் கொடுக்க வேண்டும் இங்கே இருக்கும் மாநில அரசு ஊராட்சி மன்ற அலுவலகம் பணம் கொடுக்க முடியாது

100 நாள் வேலை பணிக்கு ஒரு வேலைக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தால் 40,000 மாநில அரசு கொடுக்க வேண்டும் மத்திய அரசு 60,000 கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது

மாநில அரசு எப்படி 40 ஆயிரம் கொடுக்கும் மாநில அரசிடம் பணம் இல்லாததால் மார்ச் 31 வரை மட்டுமே 100 நாள் வேலை நடைபெறும் அதற்கு பின்பு இருக்காது

ஆனால் அதிமுக காரர் என்ன சொல்வார்கள் என்றால் நம் உதயகுமார் கூசாமல் பொய் சொல்வார் வாலியை கொடுத்து உங்களை ஏமாற்றி வைத்திருக்கிறார் நீங்களும் ஏமாந்து போகிறீர்கள் அதைக் கொடுத்து உங்களை ஏமாற்றி 125 நாள் வேலை கொடுக்கிறோம் என்று கூசாமல் பொய் சொல்கிறார் முதலில் இருக்கிற நாட்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை

நான் உறுதியாக சொல்கிறேன் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 100 நாள் வேலையை காலி பண்ண போகிறார்கள் அதற்கு காரணம் உதயகுமார் எடப்பாடி மோடி இந்த மூன்று பேர் தான் ஆகையால் இந்த மூன்று பேரை நாம் தண்டிக்க வேண்டும் எங்களைப் பொறுத்தவரை 100 நாள் வேலையை மறுபடியும் கொண்டு வந்தே தீருவோம் இவ்வாறு கூறினார்

முன்னதாக செக்கானூரணி உள்ள பசும்பொன் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்இதில் 100 நாள் வேலை பார்க்கும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!