குடிசையில் வாழும் பத்மஸ்ரீ விருது பெற்றவரின் குடும்பம்; கணவர் இன்றி நான்கு பிள்ளைகளுடன் வறுமையில் வாடும் தாய்..
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தும், குடிசையில் நான்கு பிள்ளைகளுடன் அவதிப்படும் அவரின் குடும்பத்துக்கு, அரசு இதுவரை ஒரு உதவி செய்ய கூட முன்வராமல் உள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
.
.நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் வாழ்ந்த ஆலு குறும்பா பழங்குடியினத்தை சேர்ந்த, கிருஷ்ணன் என்பவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இவர், பழங்குடியின சமுதாய வாழ்வியலை கண்முன் காட்டும் வகையில், ‘சடங்கு, திருமணம், தேன் எடுத்தல், கோவில் திருவிழா, இயற்கை பாதுகாப்பு,’ குறித்து பல்வேறு ஓவியங்களை இயற்கை நிறமிகள் மற்றும் ஆலம் வேர்களை துாரிகைகளாக பயன்படுத்தி, 30 ஆண்டுகளாக ஓவியங்களை வரைந்து, தேசிய அளவில் புகழ் பெற்றுள்ளார். 17 முறை டில்லியில் விருது பள்ளி பருவத்தில், 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், மண்ணின் மைந்தர்களின் வாழ் வியலை, இயற்கை முறையில் வரைந்ததற்காக, 17 முறை டில்லி சென்று பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். கூகுளில் தேடினால் இவரின் ஓவியங்கள் உயிர்பெற்று, பார்வையாளர்கள் கவரும் தன்மை கொண்டது. இவரின் சிறந்த பணியை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவித்தது. இந்த மகிழ்ச்சியான கவுரவத்தை கூட அறிய முடியாமல், கடந்த மார்ச் மாதம் உடல் நலகுறைவால் அவர் உயிரிழந்தார். இவரின் ஓவியங்கள் உலகம் முழுவதும் உயிர்பித்துள்ள நிலையில், இவரின் குடும்பம் மட்டும் தற்போதும் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வறுமையின் பிடியில் சிக்கி குடிசையில் வாழ்ந்து வருகிறது. நான்கு பிள்ளைகளுடன் அவதிப்படும் தாய் கிருஷ்ணனின் மறைவுக்கு பின்னர், கோத்தகிரி அருகே வெள்ளரி கோம்பை கிராமத்தில் இருந்து, அவரின் குடும்பத்தினர், பிழைக்க வழி தேடி, நீலகிரி எல்லையில் உள்ள கல்லாறு பாக்கு பண்ணையில் குடிசை வீட்டில் வசித்து வகின்றனர். கிருஷ்ணனின்மனைவி சுசீலா கூலி வேலை செய்து நான்கு பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். இவரின் மூத்த மகள் வாசுகி, ஊட்டி தனியார் பார்மசி கல்லுாரியில் பி.பார்ம்., பிரிவில் சேர்ந்து, ஒரு மாதம் படித்த நிலையில், தந்தை உயிரிழந்ததால் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை நிறுத்திவிட்டார். இவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்யவில்லை. இவர் தற்போது தாயாருக்கு உறுதுணையாக உள்ளார். 9-ம் வகுப்பு படிக்கும் ராகுல் மேட்டுப்பாளையம் சீலியூர் அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார். 7-ம் வகுப்பு படிக்கும் மகள் கீதா; 4-ம் வகுப்பு படிக்கும் கீர்த்திகா இருவரும், விடுதியில் தங்கி அரவேனு அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். எங்களுக்கு எந்த தகவலும் இல்லை மூத்த மகள் வாசுகி கூறுகையில், ”மத்திய அரசு எனது தந்தைக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்திருந்த போதும், பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த எங்களுக்கு, மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த தகவலையும் கூறவில்லை. நான் படித்து எனது தாயாரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், கட்டணம் செலுத்த கூட முடியாத நிலையில் தவித்து வருகிறோம். கோவையில், படிக்க யாரேனும் உதவி செய்தால் நிச்சயமாக சாதிப்பேன். சிறிய வயதில் எனது சகோதரர், இரு சகோதரிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். ”பத்மஸ்ரீ விருதை நேரில் பெற, எனது தந்தை இல்லாதது கவலையாக இருந்த போதும், எங்கள் சமுதாயத்தின் ஓவியத்திற்கு இதன் மூலம் உயிர் கொடுத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ”எனவே, மத்திய, மாநில அரசுகள் விருது கொடுப்பதுடன், எங்களுக்கு வீடு மற்றும் படிப்பதற்கு உதவி செய்தால், எனது தந்தை போல நாங்களும் ஏதாவது ஒரு துறையில் சாதிப்போம்,”என்றனர்.
பத்மஸ்ரீ விருதுடன் நேரடி பண உதவி, ஓய்வூதியம் கிடையாது இது முழுக்க முழுக்க கௌரவ விருது ஆகவே வாய்ப்புள்ளவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவும். கிருஷ்ணன் அவர்களின் மனைவியின் கைபேசி எண் 94426 04094




You must be logged in to post a comment.