18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சென்னையில் பயங்கரம்;பீகார் இளைஞர் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரமான கொடூரம்..

சென்னையில் பயங்கரம்;பீகார் இளைஞர் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரமான கொடூரம்..

எழுதியவர்: Askar January 28, 2026, 6:59 pm

சென்னையில் பயங்கரம்;பீகார் இளைஞர் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரமான கொடூரம்..

பீகாரை சேர்ந்த 24 வயது இளைஞர் தனது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் வேலை தேடி சென்னை வந்த நிலையில், சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலை கிடைத்த நிலையில் பீகார் இளைஞர் மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வசித்து வந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு குடியிருப்பில் தனியாக இருந்த பீகார் இளைஞரின் மனைவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அவரது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பீகார் இளைஞரை மர்ம நபர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. 

பீகார் இளைஞரை தாக்கிவிட்டு அவரது மனைவியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததுள்ளனர். பாலியல் வன்கொடுமையை தடுக்க முயன்ற பீகார் இளைஞரை மர்ம நபர்கள் அடித்தே கொலை செய்துள்ளனர்

பீகார் இளைஞரை கொலை செய்துவிட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவரது மனைவியையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். தாய் – தந்தையை இழந்து கண்ணீர்விட்டு கதறிக் கொண்டிருந்த அவர்களின் 2 வயது ஆண் குழந்தையையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொலை செய்துவிட்டு பீகார் இளைஞரின் உடலை சாக்குமூட்டையில் கட்டி அடையாறு இந்திரா நகர் ஆற்றங்கரையோரம் வீசியுள்ளனர்.

பீகார் இளைஞரின் குழந்தை சடலத்தையும் அடையாறு ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர் கொலையான பீகார் இளைஞர் மற்றும் அவரது குழந்தை சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மனைவியின் உடல் தேடப்படுகிறது. இளைஞரை கொலை செய்ததாக 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!