இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்வு!
சென்னையில் இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.370-ம், சவரனுக்கு ரூ.2,960-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,330-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று மாலையில் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.1,24,880-க்கு விற்பனையாகி வருகிறது.
கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையை பொறுத்த வரையில் இன்று மாலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.400-க்கும், ஒரு கிலோ 4 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




You must be logged in to post a comment.