18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

எழுதியவர்: Askar January 28, 2026, 1:26 pm

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம

நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

தமிழ்நாடு முழுவதும் 3 நாட்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்..

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில்,கிராம நிர்வாக அலுவலகத்தை நவீன மயமாக்குதல், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குதல், VAO பதவிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக மாற்றி அமைக்க கோருதல், தேர்வு நிலை, சிறப்பு நிலை என பெயர் மாற்றம் செய்தல்,பதவி உயர்வில் காலவரம்பை மூன்று ஆண்டுகளாக மாற்றித் தர கோருதல்,TSLR பட்டா மாறுதலில் முதன்மை செயலாளர் உத்தரவை நடை முறை படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் இன்றும், நாளையும் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்று கூடி தமது கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 30-ம் தேதி சென்னையில் மாநில அளவிலான காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!