17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்; இருவர் அதிரடி கைது..

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்; இருவர் அதிரடி கைது..

எழுதியவர்: Abubakker Sithik January 28, 2026, 12:45 am

லாரி மீது பெட்ரோல் குண்டை வீசிய விவகாரத்தில் இரண்டு நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதம்புதூர் பகுதியில் 26.01.2026 அன்று இரவு நேரத்தில் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் லாரி ஓட்டுனரான செங்கோட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தீக்காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன் பிறப்பித்த உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மருதம்புதூர் பகுதியை சேர்ந்த சுடலை ஆண்டி என்பவரின் மகன் சாமி @ சக்தி @ சூத்த (வயது 21), மற்றும் ஆதி மூலம் என்பவரின் மகன் மாரியப்பன் (வயது 24) ஆகிய இரண்டு நபர்களையும் அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!