விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப் படை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கருணாஸ் “தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றக் கூடாது என்பதற்காகத்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தோம். பா.ஜ.க-வை நம்பி ‘தர்ம யுத்தம்’ நடத்திய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பா.ஜ.க ஏமாற்றிவிட்டது. முக்குலத்தோர் சமுதாயத்தை பா.ஜ.க பிளவுபடுத்தி, டிடிவி தினகரனை சிறையில் அடைத்தது. தற்போது அவரையே கூட்டணியில் சேர்த்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க குறித்து டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்ததை மக்கள் அறிவார்கள்.பா.ஜ.க-வின் அரசியல் தீர்மானம் மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி, பிளவுபடுத்துவதுதான். ஆனால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கும் வரை இந்த மண்ணில் பா.ஜ.க காலூன்ற முடியாது,” என்றார். மேலும் நடிகர் விஜய் குறித்து பேசிய அவர், “எனக்கும் நடிகர் விஜய்க்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார், நான் லட்சங்களில் சம்பளம் வாங்குகிறேன் என்று நினைத்து என்னை சிறிய நடிகராகக் கருதலாம். ஆனால், விஜய்க்கு விசில் அடிக்கும் கூட்டத்தை விட எனக்கு விசில் அடிக்கும் கூட்டம் அதிகம். திரைப்பட வசனங்களைப் பேசி, கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே முதல்வராக வருவேன் என்று கூறுவது பேராசையைக் காட்டுகிறது,” எனத் தெரிவித்தார்.
விஜய்க்கு விசில் அடிக்கும் கூட்டத்தை விட எனக்கு விசில் அடிக்கும் கூட்டம் அதிகம்- கருணாஸ்..
எழுதியவர்: Askar January 27, 2026, 2:59 pm




You must be logged in to post a comment.