புது உதயம் மற்றும் புது வசந்தம் சார்பாக 77-வது குடியரசு தின விழா:கிராம நிர்வாக அலுவலர் சாகிராபானு தேசிய கொடி ஏற்றினார்..
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே முருகத்தூரான்பட்டியில் புது உதயம் சிறப்பு பள்ளி மற்றும் புது வசந்தம் விடுதி உள்ளது.
இந்த நிறுவனம் புனித வளனார் மேம்பாட்டு அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது.
நிர்வாக இயக்குனராக டாக்டர். I.செபாஸ்டியன் தலைமையில் பல வருடங்களாக சிறப்பாக இயங்கி வருகிறது.

இவ்விரு நிர்வாகத்திற்கும் தலைமை ஆசிரியராக ஏஞ்சல் மேரி இருந்து நிர்வகித்து வருகிறார்.
புதுவிடியல் சிறப்பு இல்லத்தில் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும் சுமார் 60 குழந்தைகள் உள்ளனர்.
புதுவசந்தம் இல்லத்தில் ஏழை,ஆதரவற்ற, பெற்றோரை இழந்த குழந்தைகள் என சுமார் 80 பெண் குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புது விடியல் மற்றும் புது வசந்தம் சார்பாக 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாலையகவுண்டன் பட்டி கிராம நிர்வாக அலுவலர் சாகிராபானு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார்.
மேலும் அங்கு உள்ள மாணவிகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.




You must be logged in to post a comment.