17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நாசா அறக்கட்டளை – சார்பாக இந்திய நாட்டின் 77வது குடியரசு தின கொடியேற்ற நிகழ்ச்சி..

கீழக்கரை நாசா அறக்கட்டளை – சார்பாக இந்திய நாட்டின் 77வது குடியரசு தின கொடியேற்ற நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2026, 11:10 am

கீழக்கரை நாசா அறக்கட்டளை – சார்பாக இந்திய நாட்டின் 77வது குடியரசு தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை 8:30 மணியளவில் கீழக்கரை வடக்குத்தெருவில் உள்ள நாசா அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வுவில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்றினைந்து தேசிய கொடியை ஏற்றிவைத்து, குடியரசு தின உரை நிகழ்த்தினார்கள் .

இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்த இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திடவும்

நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திடவும்

நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் பிரிவினைவாத கருத்துக்கு இடம் கொடுக்காமல் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கலந்து கொண்ட பலரும் வலியுறுத்தினார்.

கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள். மீரான் அலி, நசிருதீன், மக்கள் நல பாதுகாப்பு கழகம் தமீமுதீன், முகைதீன் இப்ராஹிம், கிழக்குத் தெரு பொது நலச் சங்கம் முஹம்மத் ஃபரூஸ், SDPI கட்சி அஷ்ரஃப், விடுதலை சிறுத்தை கட்சி ஹிதாயத்துல்லா, ம.ஜ.க செய்யது இப்ராஹிம் மற்றும் சமூக ஆர்வலர்கள் அன்சாரிபு, சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை நாசா தலைவர் முஸம்மில் இப்ராஹிம் நிர்வாகிகள் சாகுல் ஹமீது ( வெள்ளை ) , ரஹ்மத் அலி மற்றும் மதரஸா ஆசிரியர் இஸ்மாயில் ஆலிம் ஆகியோர் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!