17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவகோட்டையில் இருந்து பழனி தை பூசத்திற்கு காவடி ஆட்டத்துடன் புறப்பட்ட காவடிகள் -400 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் பாரம்பரியம்

தேவகோட்டையில் இருந்து பழனி தை பூசத்திற்கு காவடி ஆட்டத்துடன் புறப்பட்ட காவடிகள் -400 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் பாரம்பரியம்

எழுதியவர்: mohan January 25, 2026, 10:49 pm

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் நகரத்தார்கள் 400 ஆண்டு ஆண்டுகளுக்கு மேலாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச திருவிழாவிற்கு காவடி கட்டி பாதயாத்திரையாக சென்று வருகின்றனர் அதேபோல் இந்த ஆண்டும் வெள்ள ஊரணி நகரத்தார் பள்ளியில் காவடி கட்டும் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது, அதனை தொடர்ந்து .காவாடிகள் வேலுடன் நகரின் முக்கிய வீதி வழியாக நகர்வலம் வந்து நேற்று சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் தங்கி சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து இன்று அதி காலை கோவிலில் இருந்து காவடிகள் புறப்பட்டு திருப்பத்தூர் சாலை வழியாக பழனி தைப்பூச திரு விழாவிற்கு சென்றது. தேவகோட்டையில் இருந்து செல்லும் வழியில் பொதுமக்கள் காவடிக்கு மாலை அணிவித்து வேலுக்கு பன்னீர் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபாடு செய்து அனுப்பி வைத்தனர் பழனி தைப்பூசத்திற்கு 48 நகரத்தார் காவடிகளும் ஒரு முதலியார் கட்டளை காவடி யும் புறப்பட்டுச் சென்றது, தேவகோட்டை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் அனைத்து காவடிகளும் ஒன்று சேர்ந்து காவடி ஆட்டம் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!