தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள அஸ்வராவ்பேட் மண்டலத்தில், ஒ
எழுதியவர்: ஆசிரியர் January 25, 2026, 2:28 pm
தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள அஸ்வராவ்பேட் மண்டலத்தில், ஒரு உயரமான மலையில் அடர்ந்த காட்டுப் பகுதியில் மூன்று பேர் கொண்ட ஒரு பழங்குடி குடும்பம் கடந்த ஆறு ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறது. இந்த குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் மகன் உள்ளனர். மலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சென்றாலும், அங்கு மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதில்லை. இங்கு தொலைபேசி மற்றும் மின்சார வசதிகள் இல்லாத நிலையில், அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். அவர்கள் அங்கு தங்கியிருப்பதற்கான காரணங்கள் என்ன? அவர்களின் வாழ்க்கை எப்படி உள்ளது? ஆறு வருடங்களாக காட்டை விட்டு வெளியேறாத இந்த குடும்பத்தைப் பற்றி அதிகாரிகள் என்ன கூறுகிறார்கள்? குப்பலமங்கம்மா கோவிலுக்கு அருகில், மாலை 6 மணிக்குப் பிறகு மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், அந்தக் கோயிலுக்கு அருகில் பல ஆண்டுகளாக 40 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதியில், பழங்குடியினரின் காவல் தெய்வமான குப்பலமங்கம்மா கோயில் உள்ளது. மூலம்: BBC News தமிழ்



You must be logged in to post a comment.