17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

எழுதியவர்: Askar January 25, 2026, 10:30 am

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

பன்றி இறைச்சி உண்ண தடை ஏன்?

அத்தியாயம் 49

“தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான (உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை” என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(திருக்குர்ஆன் 6:145)

இறைவன் மனிதனுக்காக ஏராளமான உணவுகளை படைத்து, அதில் எவற்றையெல்லாம் உண்ணலாம் எவற்றையெல்லாம் உண்ணக்கூடாது என்றும் தனது திருமறையில் தெளிவாகக் கூறிவிட்டான். அதில் பன்றியின் இறைச்சியை உண்ண இறைவன் தடைவிதித்துள்ளான் அதனை ஏன் என்று இன்றைய மருத்துவரீதியாக ஆராய்ந்த மருத்துவர்கள் அதன் தீமைகளை பட்டியலிடுகின்றனர். பன்றி இறைச்சியில் ஏராளமான புரதசத்துக்களும், சில விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருந்தாலும், அந்த இறைச்சியில் கேடுகளை விளைவிக்கும் ஏராளமான பொருட்கள் உள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு கிலோ ஆட்டு இறைச்சியில் 170 கிராம் கொழுப்பும், ஒரு கிலோ மாட்டு இறைச்சியில் 50 கிராம் கொழுப்புமே உள்ளது. ஆனால் பன்றியின் இறைச்சியில் ஒரு கிலோவில் அரைகிலோ கொழுப்பு உள்ளது. பன்றி இறைச்சியில் சோடியத்தின் அளவு அதிகமாக உள்ளது. இவைகள் எளிதாக மாரடைப்பை (Heart Attack) ஐ வரவழைக்கும். எல்லா கால்நடைகளுக்கும் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இதன் மூலம் உடல் வெப்பமாகும் போது வியர்வை சுரந்து வெப்பத்தை தணிப்பதுடன் கெட்ட நீரும் வெளியாகிறது. பன்றிகளுக்கு வியர்வைத் சுரப்பிகள் இல்லாததால் 29டிகிரி வெப்பத்திற்கு மேல் அதனால் தாங்க முடியாததால், சாக்கடையில் புரண்டு வெப்பத்தை தணித்துக்கொள்கிறது. பன்றியின் இறைச்சியில் மனிதனுக்கு கேடுசெய்கிற நாடாப்புழுக்கள் என்ற நுண்கிருமிகள் ஏராளமாக உள்ளன. இதில் நீளமான நாடாப்புழுக்கள் குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கி விடுகிறது.அது இடும் முட்டைகள் ரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனிதனின் மூளையை சென்றடைந்தால், மனிதன் தனது நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனிதனின் இதயத்தை அடைந்தால் மாரடைப்பு உருவாகிறது. கண்ணை அடைந்தால் கண்பார்வையை இழக்க வைக்கிறது. கல்லீரலை அடைந்தால் கல்லீரலை செயலிழக்க வைக்கிறது. பன்றி இறைச்சியில் உள்ள Trichura tichurasis என்ற புழுவகை, இறைச்சியை எவ்வளவு அதிக வெப்பத்தில் வேக வைத்தாலும் சாகாமல், இறைச்சியை உண்பவர்களுக்கு ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப் புழு, ஊசிப்புழு,கொக்கிப்புழு, உண்டாகிறது.  எவ்வளவு அதிக வெப்பத்திலும் இவைகள் சாவதில்லை.இந்த நுண்கிருமிகள் மூலமாக மூளைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம், போன்ற 70 வகையான நோய்கள் வருவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. பன்றி உணவை சாப்பிடாத இஸ்லாமிய நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள இதய வீக்க நோயாளிகளை விட, பன்றிக்கறியை அதிகம் சாப்பிடும் ஐரோப்பிய நாடுகளில் இதய வீக்க நோயாளிகள் ஐந்து மடங்குகள் அதிகமாக உள்ளனர். பன்றி சேற்றிலும், மலத்திலும், சகதியிலும் வாழும் ஒரு விலங்கினம். கழிவறை வசதிகள் இல்லாத அந்தக் காலங்களில் பன்றியே மலங்களை உண்டு இடங்களை சுத்தப்படுத்தியது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் இறைச்சிக்காகவே பன்றிகளை பண்ணைகளில் வளர்க்கிறார்கள். இருப்பினும் அதன் குணமாக (Character) தன்னுடைய மலத்தையும், பிற மலங்களையும் உண்ணும் நிலையில் உள்ள ஒரு விலங்காகும். பன்றி தனது இணையுடன் பிற பன்றிகளையும் கூட்டிவந்து, கூட வைத்து உறவு கொள்ள வைக்கும். இன்றைய மேற்குலக நாடுகளில் மனைவிகளை மாற்றிக்கொண்டு உறவு கொள்ளும் கலாச்சாரம் சாதாரணமாக கருதப்படுகிறது. இதுபோன்ற பன்றி இறைச்சி உண்பவரகளின் மனதில் படியும் படிமாணங்கள், வெட்க உணர்வுகளை மழுங்கடித்து விடுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பைபிளில் அதிகாரங்கள் 11,14,65 ன் பல வசனங்களில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் கிறிஸ்தவர்கள் பன்றி இறைச்சியை விரும்பி உண்கிறார்கள். மேலை நாடுகளில் இந்த இறைச்சி அதிகம் உண்ணப்படுவதால், ஆண் பெண் பாலின உறவுகள் சீரழிந்து இருக்கின்றன.பன்றி இறைச்சியில் சில நன்மைகள் இருந்தாலும், ஏராளமான தீமைகள் நிறைந்திருப்பதால் இன்றைய மருத்துவ உலகம் இதனை தீங்கு என்றே கூறுகிறது. திருக்குர்ஆன் பன்றி இறைச்சியை விலக்கி இருப்பது மனித குலத்திற்கான நன்மை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!